VSK BJP: சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பார்த்து வருகின்றனர். குறிப்பாக விஜய் அதிமுகவுடன் இணைந்தால் கட்டாயம் திமுக கூட்டணி உடையும் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். அதைப் போலவே திருமா மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை அதிருப்தி நிலையையே தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் எதிர்பாராவிதமாக மீண்டும் பாஜகவுடன் அதிமுக இணைந்து விட்டது.
அதேபோல திமுக தலைமைக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்து வந்த அழுத்தமும் தொய்வு அடைந்து போனது. மீண்டும் திமுக கூட்டணி கட்சிகளை அடிப்பணிய வைக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி இருக்கையில் திருமா தொகுதி ரீதியாக இம்முறை பெரும் கட்சிகளை தாண்டி தங்களுக்கு கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என கேட்டு வருகிறார். இதனை பொதுவெளியில் தெரிவித்திருந்ததால் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதனை வைத்து இவர் மாற்றுக் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக பலரும் பேசினர். ஆனால் திருமா இது ரீதியாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவில் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் நான் ஒருபோதும் சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் இணைய மாட்டேன் எனக்கூறி கும்பிடு போட்டு திரும்பி விட்டேன்.
பதவி கொடுத்தாலும் சரி ஆசை வார்த்தைகள் பேசி மயக்கினாலும் சரி ஒருபோதும் விடுதலை சிறுத்தை கட்சி ஒத்துழைப்பு தராது என கூறியுள்ளார். தற்போது அரசியல் வட்டாரத்தில் பாஜகவின் மூத்த நிர்வாகி எனக் கூறினாரே அவர் யார்?? அல்லது எடப்பாடியாக இருக்குமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.