ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸை பங்கம் செய்த! திருமாவளவன்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் பாரதிய ஜனதா சார்பாக வெற்றிவேல் யாத்திரை என்ற நடத்த இருப்பதை தொடர்ந்து அதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கின்றார்.

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த யாத்திரை மூலமாக ஜாதி மத வெறியை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க பாரதிய ஜனதா முயற்சிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, வைரமுத்து, போன்றவர்கள் இந்து மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

நீதிமன்றத்தை அவமானப்படுத்திய எச் ராஜா, பெண்களை அவமரியாதையாக பேசிய எஸ்வி சேகர், ஆகியோர் மீது பல தரப்புகளில் இருந்து புகார் வந்ததும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் காவல்துறையினர் பாஜகவினர் இணையதள வழியில் புகார் அளித்தவுடன் வழக்குப் பதிவு செய்கிறது காவல்துறை என்று தெரிவித்திருக்கிறார்.

மனுதர்மத்தை எதற்காக பெரியார் எதிர்த்து நின்றார் என்பது பற்றி ஒரு இணையவழி கருத்தரங்கில் சுமார் 40 நிமிடங்கள் நான் பேசிய வீடியோ ஒன்று இருந்தது

அதனை தவறுதலாக பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை எனவும் அந்த நூலில் என்ன தெரிவிக்கப்பட்டு, இருக்கிறதோ அதையே தான் கூறினேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் எவ்வாறு இவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்களோ, அதேபோல தமிழ்நாட்டிலும், அதை இங்கேயும் கையாள முயற்சி செய்கிறார்கள்.

சாதி வெறியை தூண்டும் ஹெச் ராஜா மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய தன்னுடைய பெயரில் புகார் கொடுத்து இருக்கின்றேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சாதிமத பேதம் உள்ளவர்களுக்கு இங்கே இடமில்லை என தெரிவித்த, அதிமுகவின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை தங்களுடைய சுவரொட்டிகளில் பயன்படுத்துவதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது.

எனவும் அதிமுகவும் முதல்வர் அவர்களும் மற்றும் துணை முதல்வரும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது என்றும் திமுக கூட்டணியில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அரசியல் உள் நோக்கத்திற்காக மதவெறி மற்றும் சாதி வெறி உள்ளவர்களை இங்கே அனுமதிப்போமானால், அது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் போன்றவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்று முதல்வருக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.