அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உரிய நீதி வாங்கித் தருமாறு திருமா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்+.
விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி என்றாலும் இருவருக்கிடையே பனிப்போர் என்பது இருந்துதான் வருகிறது. நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் நிகழ்ச்சியில் திருமா கலந்து கொள்ளாததற்கு முக்கியமான காரணம் திமுக தான் எனக் கூறினர். இவ்வாறு இருக்கும் பொழுது பல பிரச்சனைகளில் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருவதுண்டு.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குறித்து உரிய நீதி வேண்டும், மேற்கொண்டு குற்றவாளி வெளியே வருவதற்கு முன் புலன்விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் அதிமுக பாஜக பாமக என அனைவரும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால் குற்றவாளி யாரிடம் சார் என்று பேசினார்.
அதேபோல பாலியல் வழக்கு ரீதியாக எஃப் ஐ ஆர் வெளியிட கூடாது என்ற விதிமுறை இருக்கும் பொழுது இந்த பெண்ணின் வழக்கு சம்பந்தப்பட்ட தரவுகள் எப்படி கசிந்தது. இது அனைத்தையும் வெளியிட்டு திமுக அப்பெண்ணை அச்சுறுத்துவது போல் உள்ளது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கருத்தையே தற்பொழுது திருமாவளவனும் முன் வைத்துள்ளார்.
அதாவது குற்றவாளி ஞானசேகரன் பேசிய “சார்” என்பது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். யார் அந்த சார் என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை கேட்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் விதமாகவும், பல்வேறு போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து போராட்டங்கள் நடைபெறும் பொழுது எதிர் கட்சிகளுக்கு வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் விசிக மற்றும் திமுக இடையே சமரச உறவு இல்லாத நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். ஏனென்றால், இதே வழக்கு சம்பந்தமாக ஆளுநரை விஜய் சந்தித்த பொழுது மகுடிக்கு மயங்கி விடாதீர்கள் என்று விசிக சார்பாக எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.