DMK VSK: திமுகவை கடந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது வரை தங்களது கூட்டணியை யாருடன் வைத்துக் கொள்வோம் என்பது குறித்து உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். அதிலும் குறிப்பாக தேமுதிக தங்களது மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளை கலைக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
ஆனால் அவர்களுக்குள்ளேயே உட்கட்சி பூசலானது உள்ளது. அதிலும் திமுக கூட்டணியில் முதன்மையாக இருப்பது திருமாவின் விடுதலை சிறுத்தைகள் தான். அவர்களுக்கு இரண்டு தொகுதிகளை மட்டும் தான் ஒதுக்குகிறது. இது முற்றிலும் நியாயமற்றது என விசிக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்டு திருமா கோரிக்கை வைத்துள்ளார். இவர்களின் கோரிக்கையை தலைமை ஏற்பதாக தெரியவில்லை.
கூட்டணி கட்சியை எதிர்க்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்படி ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கும் போது எதிர்கட்சியினர் தான் முக்கிய ஆதரவாக அவர்களுடன் நிற்பார். ஆனால் அவர்களுக்கு முன்பு திமுகவையே எதிர்த்து நிற்கும் வரிசையில் திருமா முதலாவது ஆளாக உள்ளார். இவையனைத்தும் கட்சிக்குள் உள்ள பகையை அப்பட்டமாக காட்டுகிறது.
சமயம் பார்த்து திருமாவை மாற்றுக் கட்சியினர் மடக்கிவிடலாம் என எண்ணுகின்றனர். அந்த திட்டம் எந்த அளவுக்கு பழிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

