முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!
இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிகள் ஏந்திய படி போலீசாரை இழிவுபடுத்தி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதனை கண்டிக்கும் படியும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது, அதில் காவல் துறையினரை எச்சை பிழைப்பு, காவல் நாய்களே என கோஷங்களை எழுப்பி மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.
இவ்வாறு ஒரு காவல்துறை அதிகாரி தவறு செய்ததற்கு அனைவரையும் இவ்வாறு பேசுவதா என பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த வீடியோவும் வைரலானது. அவ்வாறு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தற்பொழுது கட்சியில் 3 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை இழிவாக விமர்சித்த காரணத்தினால் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.தற்பொழுது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அண்ணாமலை கோரிக்கை வைத்த இரு நாட்களிலே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது வியப்பை அளிக்கிறது.அதுமட்டுமின்றி முதல்வர் தனிப்பட்ட முறையில் திருமாவளவனை கண்டித்ததாகவும் கூறுகின்றனர்.அதன் விளைவாக தான் மாவட்ட செயலாளர் கட்சியை விட்டு நீக்கியதாக கூறுகின்றனர்.