சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்!
வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் சுசிலா சாமியப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.

அதிமுகவின் கரூர் பகுதியின் 12-ஆவது வார்டு பிரதிநிதியாக சுசிலா சாமியப்பன் இருந்து வருகிறார், சமூகவலைத்தளங்களில் முழுவீச்சில் தனது கட்சிக்காக செயல்பட்டு வருபவர்,. கட்சியின் முக்கிய செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார், தன்னுடைய சொந்தக் கருத்தையும் அவர் அவ்வப்போது பதிவிடுவார்,. இவர் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் தீவிர ஆதரவாளர் ஆவார்,. செந்தில்பாலாஜி வென்ற கரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருபபமனு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்நிலையில்,.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சி கூட்டத்தில் பேசும் போது மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களை பற்றி மிககீழ்த்தரமாக ‘சரக்கு இருக்கு எங்ககிட்ட தான் இருக்கு,. அதனால் தான் உங்கள் வீட்டுப் பெண்கள் எங்களை தேடி வருகிறார்கள்,. உங்க பசங்களுக்கு ஆண்மை இல்லை என்று கேவலமான முறையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,. திருமாவளவனை விமர்சித்து தைரியமாக துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவார்,. இந்த சூழ்நிலையில் அவர் தொடர்ந்து திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவு செய்வதனால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்பவர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்,.
புகாரில்,. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அவதூறாகவும் ஒருமையிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் இதில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும்,. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையான அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்,. எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது,.
