பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

Photo of author

By Parthipan K

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது.

திமுகவும் பதிலுக்கு அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என அனைவரும் தேர்தலில் களப்பணி செய்து வருகின்றனர்.

ஆனால் திமுக மட்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடவில்லை என கூறிவருகின்றனர். வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரும்பாலும் காணவில்லையாம். காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுக்க வில்லையாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் பொழுது கூட திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அவ்வளவாக அழைக்கவில்லை. தேர்தலில் ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். அதிமுகவை விட திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம் இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக வைக்கும் திமுக மீதான குற்றச்சாட்டு போய் என ஆகும்.

திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அளிக்காதது கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கூட அவ்வளவாக பிரச்சாரத்தில் இல்லையாம். எது என்னவோ திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அழைக்காதது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என ஒரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

நடந்து முடிந்த தேர்தலில் கூட திமுக திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அவ்வளவாக அழைக்கவில்லை என்பது மற்றவர்களின் கருத்து.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்