தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி

Photo of author

By Anand

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி

Anand

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

தலித் முதல்வர் கோரிக்கை திட்டமிட்ட நாடகம் – திருமாவளவன் பதிலடி

தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று பேசி தலித் மக்களின் மீது வலையை வீச எண்ணுகிறார் ஆளுநர். தலித் மக்கள் ஏமாற மாட்டார்கள் என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் பங்கேற்று இருந்தார். அந்நிகழ்ச்சி உரையில் ஆளுநர் அவர்கள் “சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவு படுத்தி வைத்திருக்கிறது என்றும், ஆதிதிராவிடர் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்” எனவும் கூறியிருந்தார். இவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஆளுநரின் உரைக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக அமைச்சர் திருமாவளவன் தனது கருத்துக்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது: ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து அவர் பேசுவதும், செயல்படுவதும் நீடிக்கிறது. தலித்துகளை வலதுசாரிகளின் பக்கம் கவர்வதற்காக குறிப்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இன் தரப்பை நோக்கி ஈர்ப்பதற்காக அடிக்கடி அவர் தலித்துகளை பற்றியும் பேசுகிறார். தலித்துகளில் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று அவர் கூறுவது அப்பாவி தலித்துகளை வலைத்து போடுவதற்கான ஒரு சூழ்ச்சி என்றும் கூறினார்.
ஆனால் இவரை நம்பி தமிழ்நாட்டைச் சார்ந்த தலித்துகள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என்பதை ஆளுநருக்கு தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன் என்றும் திருமாவளவன் கூறினார்.

மேலும் அவர் திடீரென்று சுவாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதும், தலித்துகளை பற்றி அவர் பேசுவதும், தலித்துகள் முதல்வராக வேண்டுமென்று கூறுவதும் ஒரு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது என்று கூறினார்.
இவ்வுரையின் இறுதியாக அவர் வேங்கை வயல் குறித்த செய்திகளையும், சீமான் அவர்கள் பெரியார் குறித்து பேசிய சர்ச்சை செய்திகள் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேலும் ஆளுநரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தலித் சமுதாயத்தை சார்ந்த நான் தலைவராக உள்ளேன். அதேபோல் அகில இந்திய பாஜக தலைமையையோ, தமிழக பாஜக தலைமையையோ ஒரு தலித்துக்கு வழங்க ஆளுநர் பரிந்துரை செய்வாரா? அல்லது தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த பதவிக்கு ஒரு தலித் சமுதாயத்தை சார்ந்தவரை நியமிக்க பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்வாரா? ஊருக்கு உபதேசம் செய்கிற ஆளுநர் இதையெல்லாம் செய்ய முன் வருவாரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை செல்வப் பெருந்தகை எழுப்பினார்.