வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன்.
சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து மிகவும் வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ளது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இவரை போன்று வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமே உள்ளது.ஒரு எழை இளைஞன் இந்த நிலையை அடைந்ததாலோ என்னவோ ஒட்டு மொத்த தமிழகமும் இவரை புகழ்ந்து வருகிறது.இவர் விளையாடும் போட்டிகளையும் முன்னணி வீரர்களுக்கு அளிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளித்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
மேலும் யார்க்கர் நாயகன் நடராஜனை பற்றி பல்வேறு ஊடகங்களும் விதவிதமாக கவர் ஸ்டோரி வெளியிட்டு பெருமை படுத்தி வருகிறது.ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு சில பத்திரிக்கைகள் மட்டும் நடராஜனுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும்,நடராஜன் பேரும், புகழும் வந்ததும் ஆளே மாறி விட்டதாகவும் வன்மத்தை வெளியிட்டன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தெலுங்கானா ஆளுநர் தமிழிசை,பாமக நிறுவனர் ராமதாஸ்,தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை அனைவரும் நடராஜனுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் நடராஜன் 20-20 ல் அறிமுகமாகிய போதும், அதில் அவர் முதல் விக்கெட்யை எடுத்த போதும், அதே போல் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி முதல் விக்கெட்டை எடுத்த போதும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் அவருடைய திறமையான பந்துவீச்சு தான் இந்தியா அணி வெற்றி பெற முக்கிய காரணம் என்று அனைவராலும் கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜனுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி தலைவர் மட்டும் அமைதியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது.அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தான்.
சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் ஆக்டீவ் ஆக இருக்கும் இவர் இதுவரை இந்திய அணியில் இடம் பெற்ற நடராஜனை வாழ்த்தி ஒரு டுவிட் கூட பதிவிடவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது தனது திறமையால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நடராஜன் ஒரு குறிப்பிட்ட சாதி என்பதும்,அந்த சாதியை சேர்ந்தவர்களை திருமாவளவன் அரசியல் எதிரியாக கருதப்படுவது காரணமாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
இந்நிலையில் தன்னுடைய திறமையால் இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் ஒரு தமிழன் என்ற உணர்வு கூட இல்லாமல் சாதி அடிப்படையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்த திருமாவளவன் தான் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க போகிறாரா? என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இவர் வாழ்த்து தெரிவிக்கிறாரோ இல்லையோ தமிழரான நடராஜன் அடுத்து நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் இறங்கவுள்ளார்.இதனையடுத்து இந்த டெஸ்ட் தொடரிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.