வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்

0
212
Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1
Social activist criticise VCK Thirumavalavan-News4 Tamil Online Tamil News1

வன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்

சமீபத்தில் பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் அதிமுக அரசு அவசர கதியில் தாக்கல் செய்தது.இதனையடுத்து இது தேர்தல் நாடகம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் 20 சதவீதம் கேட்டவர் 10.5 சதவீதத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி சம்மதித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வன்னியர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று மதுரை அருகே வாடிப்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வில்லை என்றும்,அதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.குறிப்பாக பாஜகவின் தலையீடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதே போல தமிழகத்தில் ஒரே கட்டமாகவும்,மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்துவதில் உள் நோக்கம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து இட ஒதுக்கீடு குறித்து பேசிய அவர் 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மட்டுமே சாதி அடிப்படையில் எடுக்கப்பட்டது எனவும்,அதன் பிறகு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடக்கவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 10.5 சதவீத வன்னியர்கள் இருக்கிறார்கள் என்று இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள் என்றால் அது 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பாக தான் இருக்கும்.

அதே போல வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் தற்போது 10.5 சதவீதத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டார்.அப்படியென்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதை எந்த அடிப்படையில் அவர் ஒப்பு கொண்டார்.குறிப்பாக இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது.

அதே போல கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் அனைத்தும் தேர்தல் நேர நாடகமாகவே பார்க்கப்படுகிறது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் எந்தெந்த சமூகம் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வரும்.அதன் பிறகு இட ஒதுக்கீடு கொடுப்பதே உண்மையான இட ஒதுக்கீடாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்நேரமும் வன்னியர்களுக்கு எதிராக பேசி வரும் திருமாவளவன் தற்போது மட்டும் வன்னியர்கள் மீது அக்கறை உள்ளது போல பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதடுப்பூசி செலுத்திய செவிலியரை கிண்டல் செய்த பிரதமர்! கலகலப்பான எய்ம்ஸ் மருத்துவமனை!
Next articleகிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் மங்குதல் சரிசெய்ய அற்புதமான வீட்டு வைத்தியம்!