கடந்த நான்கு தினங்களில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக இதுவரையில் இருவதற்கும் மேற்பட்ட மத அடிப்படை வாத இஸ்லாமியர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவினரின் மீது குற்றம் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதுடன் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முயற்சிதான் இது என்பது உறுதியாகிறது என பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது, பாஜகவை சார்ந்தவர்களே தங்களுடைய வீடு கார் உள்ளிடவற்றைக்கு பெட்ரோல் கொண்டு வீசிவிட்டு, அதனை இஸ்லாமிய சமூகத்தின் மீது பழி போட்டு அவர்களை குற்றவாளியாக சித்தரிக்கின்றது என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
மேலும் தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன் இதன் மூலமாக பாஜகவினர் மீதான தாக்குதலை தூண்டிவிடுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசும் காவல்துறையும் இந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்னை நாராயணன் திருப்பதி தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.