என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!

0
88

பிஎஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினை இல்லாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வழங்குவதோடு பயிற்சி முகங்கள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை 19 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தான் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை போன்ற பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தியது. பிஎஃப் ஐ அமைப்பின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அன்றைய தினம் 106 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். இதனையடுத்து நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் காவல்துறையினர் நேற்று மீண்டும் நடத்திய சோதனையில் அந்த அமைப்பைச் சார்ந்த 170 பேர் கைது செய்யப்பட்டார்கள்.இந்த நிலையில் பி எஃப் ஐ அமைப்பை சட்டவிரோதமான அமைப்பு என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பிஎஃப் ஐ அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளது என்று தெரிவித்திருக்கின்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஊபா சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் தொடர்புடைய மற்ற அமைப்புகளுக்கும் 5 வருடங்கள் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.