மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

0
131

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடிழந்தவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அங்கு சென்றபோது, மூணாறு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன்.

மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு பாதுகாப்பான வீடு ஒன்றைக் கட்டித் தரவேண்டும். அதோடு ஒரு ஏக்கர் நிலமும் தரவேண்டும். மேலும், அங்குள்ள கல்வி மற்றும் சுகாதார மையங்களை மேம்படுத்த வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Previous articleகிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleசீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?