Thirumurugan Gandhi : சீமான் பெரியாரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றக் முடியாது என திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து நாம் தமிழர் என்ற கட்சியை கடந்த 2009 ஆம் ஆண்டு நிறுவியவர் சீமான். தமிழக அரசியல் களத்தில் முக்கிய இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார். அதில், ஆரம்ப காலத்தில் பெரியாரின் கொள்கைகளை ஆதரித்து மேடைகளில் பேசி இருக்கிறார். மேலும், பெரியார் பிறந்த நாள், நினைவு நாளுக்கு புகழ் வணக்கமும் செலுத்தி இருக்கிறார் சீமான். அதன் பிறகு, நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கிய பின் தமிழ் தேசிய கொள்கைகளை கையில் எடுத்து இருக்கிறார்.
தமிழ் தேசியத்திற்கு பெரியார் திராவிடம் தான் எதரி என தற்போது நிலைபாட்டை மாறி இருக்கிறார். தமிழகத்தில் பாஜக போன்ற இந்தூவ அமைப்புகள் பெரியாரை எதிர்த்து பேச முடியாத சூழல் இருக்கும் நிலையில் சீமான் பெரியாரை அவமதித்து பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறிய இருக்கிறார். மேலும், சீமான் மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் பெரியார் பற்றி அவதுறு பரப்பி வருகிறார்கள்.
இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் மண்ணில் பிழைப்பை நடித்தி கொண்டு அவரையே இழ்ந்து பேசி விட்டு நடமாட முடியாது என பேசி இருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.