பூலோகத்தில் அழகிய கடவுள் என்றும், தமிழ் கடவுள் என்றும், அழைக்கப்படுபவர் முருகப்பெருமான் அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு 12 படை வீடுகள் இருக்கின்றன.அந்த 12 படை வீடுகளும் இந்தியாவில் அதிலும் தமிழகத்திலிருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.
மேலும் இந்த 12 படை வீடுகளும் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை.அந்த வகையில், இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாற்றை பற்றி காண்போம்.
ஒரு முறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான் தன்னுடன் இருந்த பார்வதிக்கு உலக உயிர்களின் படைப்புக்கு ஆதாரமாக அமைந்த பிரணவ மந்திரத்தினை உபதேசித்துக் கொண்டிருந்தார். அதனை குழந்தையாக தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமானும் கேட்டு ஞானம் பெற்றார்.
ஆனால் குருவால் உபதேசிக்கப் படவேண்டிய ரகசியத்தை மறைமுகமாக அறிந்து கொண்டதன் காரணமாக, முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானதாக சொல்லப்படுகிறது. இதற்கு பரிகாரம் செய்யும் நோக்கத்தில் பூலோகம் வந்து தவம் செய்தார் முருகப்பெருமான்.
அந்த தவத்தின் முடிவில் முருகப்பெருமானின் பாவம் விலகி சென்றது, அதோடு அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார், அந்த தலமே திருப்பரங்குன்றம் என்றழைக்கப்படுகிறது. இதுவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக அமைந்திருக்கிறது.
இந்த திருப்பரங்குன்றத்தில் தான் முருகப்பெருமான் தேவர்களின் தலைவனான இந்திரனின் மகளான தெய்வானையை மணமுடித்துக் கொண்டார்.
இந்த மலையின் கிழக்குப் பகுதி பெரிய பாறைகளிலும், மேற்குப்பகுதி சிவலிங்கம் போலவும், வடபகுதி கைலாயம் போலவும், தெற்குப்பகுதி யானை ஒன்று படுத்திருப்பதை போலவும், காட்சி தருவதை நாம் பார்க்கலாம்.
பவுர்ணமி தினத்தன்று இந்த மலையை சுற்றி வலம் வந்து வழிபட்டால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.