பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

0
302

பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி வந்து பொக்கலைன் இயந்திரங்களை சிறை பிடித்து வயல்களை அழிக்க விடமாட்டோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கண்டியூர் கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா,பலா,வாழை மற்றும் நெல் தென்னை வெற்றிலை சாகுபடி ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. இந்த செழிப்பான விளை நிலங்களை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

விளை நிலங்களை அழிக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காட்டுக்கோட்டைபாதை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்து 30 ஆம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு கொடியுடன் வயல்களில் இறங்கி வந்து வயலை அழிக்க விடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது

Previous articleபேரூராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் உறுப்பினர் ரகளை! காவல் நிலையத்தில் புகார்
Next articleகாப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடித்த தனியார் மருத்துவமனை மீது பெண் புகார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here