திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?

0
143

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது இதை தொடர்ந்து மலை உச்சியில் மாலை 6மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

இப்படி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதையொட்டி, திருவண்ணாமலை கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், திரி ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தினமும் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டு வருவது வழக்கம்.

மகா தீபத்தன்று நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள், மகாதீபம் ஏற்றப்படும் 11 நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து தீபத்தை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலைக்கு வந்து தரிசிக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இந்த மகாதீபம் ஆனது நாளை வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து, நாளை மறுதினம் காலை மகாதீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர், அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீபச்சுடர் பிரசாதம் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர், நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீபமை பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous articleகைதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு 12 பேர் பலி?
Next articleஇந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்