திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Photo of author

By Rupa

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக நாடுநாடாக தாவி தொற்றை பரப்பியது.மக்கள் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.அதன்பின் மக்கள் அனைவரும்  வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வேலை  வாய்ப்புகள் இன்றியும் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் இரண்டாவது அலை உருவாகி உள்ளது.

தற்போது பிரேசில்,ஐரோப்பியா நாடுகளில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.நம் இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது நம் தமிழகம் உட்பட 5 மாவட்டங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி தன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மக்களின் வாக்குகளை பெற பரப்புரை ஆற்றி வருகின்றனர்.இந்த பரப்புரையில் யாரும் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை.கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி கூட இல்லாமல் அவர்களின் தலைவர்களுக்கு கோஷம் போட்டு செல்கின்றனர்.இதனால் மூத்த கட்சியின் பெரும் புள்ளிகள் அனைவருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேன்டும்மென்றால் மநீம கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.நாளுக்குநாள் கொரனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேப் இருக்கிறது.அதைத்தொடர்ந்து நமது தமிழகத்தில் பல கோவில் தளங்கள் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது.அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் திருவண்ணாமலை.

இந்த திருவண்ணாமலையில் பௌர்ணமி அன்று ஆயிரம்கணக்கான மக்கள் கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு தற்போது கிரிவலம் வந்தால் கொரொனோ தொற்றானது அதிக அளவு பரவும் ஆகையால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்துள்ளார்.இதனால் திருவண்ணாமலையில் வரும் பக்தர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்