நாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
129
#image_title

நாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கசாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

சளி வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில நேரங்களில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். இதனை சரி செய்ய இயற்கையாக கிடைக்கும் பொருளை பயன்படுத்தி சளியை குணமாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஏலக்காய்- 2

2. கிராம்பு- 4

3. சீரகம்-அரை ஸ்பூன்

4. மிளகு- அரை ஸ்பூன்

5. இஞ்சி-சிறு துண்டு

6. சுருள்பட்டை-1

7. துளசி- 10 இலை

இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி அல்லது உடலில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த கலவையை 300 எம்எல் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் தண்ணீர் 150 ml வரும் வரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். கொதித்தல் கலவையை வடிகட்டி உப்பு அல்லது தேன் சேர்த்து இரண்டு வேளை குடிக்கலாம். இவ்வாறு குளித்து வருகையில் சளி தொல்லையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இந்த கசாயத்தை பெரியவர்கள் 150ml, ஐந்து முதல் ஆறு வயது குழந்தைகள் 100ml ,2-5 வயது குழந்தைகள் 50ml ,0-2 வயது குழந்தைகள் 5-10ml என்ற அளவு வீதம் கசாயத்தை பருகி வரலாம்.

இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கசாயத்தை ஒரு நாளைக்கு இரண்டு வேலை என்ற வீதம் எடுத்து வருகையில் சளி முற்றிலும் குணமாகும்.