தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!!

Photo of author

By Sakthi

தேர்தலில் தோல்வியை மறைக்க இந்த நடவடிக்கை! தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து!
கர்நாடக மாநல சட்டசபை தேர்தலில் தோல்வி பெற்றதை மறைக்க பாஜக அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். இது பாஜக கட்சியின் ஒற்றைத் தந்திரம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டுவீட் செய்துள்ளார்.
நேற்று அதாவது மே 19ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்துவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று வெளியான அறிவிப்பில் மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் இதை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிவிட வேண்டும் என்றும் அவ்வாறு மாற்றவில்லை என்றால் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவித்தது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த நடவடிக்கை பாஜக கட்சியின் ஒற்றை தந்திரம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநில தேர்தலில் தோல்வி பெற்றதை மறைக்கத்தான் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.