விஜய்க்கு வில்லன் இந்த நடிகர்!

0
164

விஜய்க்கு வில்லன் இந்த நடிகர்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நாயகியாகவும் மற்றும் விஜய்க்கு ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்து இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. விஜய்யின் இந்த படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவேக் ஓபராய் ஏற்கனவே விவேகம் படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர்! ஐ.நா. அமைப்பு தெரிவித்த தகவல்!!
Next articleபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள ரஷிய அதிபர் புதின்!