விவசாயிகள் கடன் உதவி பெற இந்த கார்டு மிகவும் அவசியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசு தற்போது கிசான் கார்டு கிரெடிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் சிறப்பு கடன் அட்டை வழங்கப்படும். மேலும் இதன் மூலம் விவசாயம் கடன் வழங்க வழிவகை செய்து வருகின்றன. மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மானா நிதி யோஜனா உடன் இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை இணைத்துள்ளது. அதனால் பி எம் கிஷான் பயனாளிகளும் பயன்படலாம் எனவும் அறிவித்துள்ளது.
இவ்வாறு இறுதியில் விவசாயிகள் கடன் பெறும் கிசான் அட்டையை எழுதி விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிசான் கார்டு கிரெடிட் அட்டையை வீட்டில் இருந்துபடியே நாம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உத்தரவாதம் இன்றி விவசாயிகள் மூன்று லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் 25 ஆயிரத்திலிருந்து கடன் வரம்பு துவங்குகிறது. மேலும் வருடத்திற்கு ஏழு சதவீத வட்டி விகிதத்தில் மூன்று ஆண்டுகளும் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த கடனை ஒரு வருடத்திற்குள்ளேவே விவசாயிகள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று சதவீத வட்டியானது தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் நான்கு சதவீத வட்டியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போது எஸ்பிஐ வங்கியில் கிசான் கடன் அட்டையை எப்படி விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.