அரை மணி நேரத்தில் மொத்த மலமும் வெளியேற இந்த பானம் போதும்!
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய பயனுள்ள தகவலை பகிர்ந்து கொள்கிறோம்..
காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை உட்கொண்டால் மலம் இலகுவாக வெளியேறும்.இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் என்பது தீராத பிரச்சினையாக உள்ளது.
மலச்சிக்கல் பிரச்சனையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கிறோம். நம் அன்றாட வாழ்வில் பலவகையான உணவுகளை உட்கொள்கிறோம். இதுவே செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. செரிமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் நாம் அதிகமாக சந்திக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணமாக நாம் தண்ணீரை குடிக்காமல் இருப்பதாலே இத்தகைய பிரச்சனை ஏற்படுகிறது.
நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும். அதைப் போன்று வெயில் காலத்தில் நாம் தண்ணீரை அதிகமாக குடிக்கிறோம். அதனால் வெயில் காலத்தை விட குளிர் காலத்தில் தான் மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக உள்ளது.
குளிர்காலத்தில் அதிக தண்ணீரை உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நாம் குறைவாக குடிக்கிறோம். எத்தகைய காலமாக இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 3 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் நாளடைவில் அது மூலமாக மாறிவிடும். நாம் தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு மூலப் பிரச்சனை சருமப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க எளிமையான வழி
தேவையான பொருட்கள்:
சோம்பு- 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய்-1ஸ்பூன்
எலுமிச்சை பழம்- பாதி அளவு
உப்பு -சிறிதளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
2. பின்பு அதை வடிகட்டி நன்கு ஆறியதும் அதனுடன் சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அரை எலுமிச்சம் பழத்தை நன்கு பிழிந்து அதனுடன் சேர்க்கவும்.
4. கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அரை மணி நேரத்தில் மலம் வெளியேறிவிடும்.
இத்தகைய பானத்தை தினமும் செய்யக்கூடாது. .
குறிப்பு:
சாதாரண மலச்சிக்கல் இருந்தால் இரண்டு கொய்யா பழத்தை சாப்பிட்டால் மல பிரச்சினை தீரும்.