இந்த மருந்து போலியானது! மக்கள் பயன் படுத்த தடை விதித்த அரசு!
தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.கொரோனா தொற்றை கட்டுக்குள் அடங்காத நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் முதலில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள இன்றியும்,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனை பல மோசடி கும்பல் உபயோகித்து கொள்கிறது.மக்கள் அனைவரும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரையும் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக்கக் கூறி வருகின்றனர்.எதிர்ப்பு சக்தி கொடுக்கும் உணவுகளை எடுத்து கொள்ளாமல் மக்கள் பலர் மாத்திரைகள்,லேகியம் போன்றவற்றை உட்கொண்டு வருகின்றனர்.இதனை மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டு பல போலியான மருந்துகளை விற்று வருகிறது.
அவ்வாறு அமேசான் இணையத்தளத்தில் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி தந்ததாக கூறி tulsi drops என்ற போலியான மருந்தை விற்று வந்துள்ளனர்.இவ்வாறு போலியான மருந்தை மக்கள் பயன்படுத்துவதால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.அதுமட்டுமின்றி அந்த மருந்துகள் அரசாங்க அனுமதி பெற்றவை என போலி செய்தியையும் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது.இதனால் ஆயுஷ் அமைச்சகம் அந்த மருந்தை உபயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.இவ்வாறு பல போலி மருந்துகள் சந்தைகளில் விற்கப்படுவதை தடுக்க பல நடவடிக்கைகளை மதிய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.