இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்களை பற்றி சொல்லவே தேவையில்லை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள்தான். அவர் இயக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெறும். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென பல முன்னனி நடிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் அந்த அதிர்ஷ்டம் காமெடி நடிகர் சூரிக்கு கிடைத்துள்ளது. நடிகர் சூரி பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார்.
இந்த படம் முதலில் துபாயில் எடுக்கவிருப்பதாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை சரியில்லாததால் தமிழ்நாட்டுக்கு ஏற்றபடி கதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சத்தியமங்கலம் காட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் முதலில் பாரதிராஜா நடிக்க ஒப்பந்தமானாராம். ஆனால் திடீரென்று பாரதிராஜா அந்த படத்திலிருந்து விலகினார். அதன்பிறகு வில்லன் நடிகர் கிஷோர் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் பரவியது.
ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பது வேறுயாருமில்ல நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதானாம். வயதான கதாப்பாத்திரத்துக்கான டெஸ்ட் லுக் கூட விஜய் சேதுபதிக்கு எடுக்கப்பட்டுவிட்டதாம்
முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்து பின் சில காரணங்களால் நடிக்கமுடியாமல் போய்விட்டது. இவர்கள் இருவரின் கூட்டணியை திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.