1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!

0
180
#image_title

1958 ஆம் ஆண்டு எம்ஜிஆரை தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் என்றால் நாடோடி மன்னன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் மொத்த நேரம் 3. 45 நிமிடங்கள் இந்த படத்தில் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.

 

இந்த படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் இந்த படம் வெளிவந்தவுடன் மாபெரும் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம்.

 

அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் வீரப்பா, எம் என் நம்பியார், பானுமதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். மிகப்பெரும் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் வசூலிலும் பல சாதனை படைத்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கை நிறைய வசூலை அள்ளியது. அப்பொழுது சிவாஜி அவர்கள் தேசபக்தி படங்களையும் அதே போல் தேசிய வீரர்கள் படத்தையும், எடுத்த நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் அப்பொழுது அதிகமாக இருந்தது. அதுவரை சிவாஜி படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ரசிகர்கள் இந்த படத்தால் எம்ஜிஆரின் பக்கம் சாய ஆரம்பித்தனர்.

 

இந்த படத்தில் நடித்த பானுமதிக்கும் எம்ஜிஆருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருந்ததாம். அதனால் எம்ஜிஆர் பாதியிலேயே பானுமதியின் கேரக்டரை முடித்து விட்டதாகவும், மீதி பாதி சரோஜாதேவி வைத்து எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

நாடோடி மன்னன் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் எம்ஜிஆர். இரண்டு வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எம்ஜிஆர் உடைய கனவு. முதலில் இந்த படத்தை திரைப்படம் ஆக்க வேண்டும் என்று நினைத்தவர் பானுமதி. அதன் பிறகு ஏற்பட்ட சிக்கலால் எம்ஜிஆரையே இந்த படத்தை எடுத்துக் எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தாராம் பானுமதி. அதனால் அதில் ஹீரோயினாக நடிக்க பானுமதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

எம்ஜிஆருக்கும் பானுமதிக்கும் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக, எம்ஜிஆர் பானுமதி நடித்த ஒரு பாடலையே அந்த படத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டாராம். அதன் பின் பானுமதி சூட்டிங் வர மறுத்ததால் அந்தக் கதையில் பானுமதியின் கதாபாத்திரத்தை முதல் பாதியிலேயே முடித்துவிட்டு பிற்பாதியில் சரோஜாதேவி வைத்து படம் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் படங்கள் சரியாக வரவில்லை என்றே கூறலாம். அதன் பின் தானே தயாரித்து நடித்த திரைப்படங்கள் படத்தை வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை இன்று பிடித்து உள்ளார் எம்ஜிஆர்

.

 

author avatar
Kowsalya