பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையில் இது கட்டாயம்!! ஆர்டர் போட்ட பள்ளிக்கல்வித்துறை!!

Photo of author

By Rupa

School Leave: காலாண்டு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் நடத்துக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளையுடன் காலாண்டு தேர்வானது முடிவடைய உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் முதல் காலாண்டு விடுமுறையானது தொடங்குகிறது. முதலில் பள்ளிக்கல்வித்துறையானது இந்த காலாண்டு விடுமுறை ஐந்து நாட்கள் தான் விடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் தாமதம் ஏற்படும் என்றும் இதனை மாற்றும் வகையில் வியாழன் வெள்ளி கூடுதலாக விடுமுறை அளிக்கும் பட்சத்தில் சனி ஞாயிறு உடன் ஒன்பது நாட்கள் விடுப்பு வந்துவிடும். மாணவர்களுக்கும் ஒரு காலாண்டு விடுமுறையும் முழுமையாக முடிந்துவிடும் என பரிந்துரை செய்திருந்தனர்.

அதற்கேற்றார் போல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார். மேற்கொண்டு முடிவு செய்யப்பட்ட இந்த காலாண்டு விடுமுறையானது ஆசிரியர்களின் பரிந்துரைப்படி ஒன்பது நாட்கள் விடப்படும் என அறிவிபை வெளியிட்டனர். அந்த வகையில் அக்டோபர் 7ஆம் தேதி பள்ளி திறப்பு இருக்கும் எனவும் இந்த இடைப்பட்ட விடுமுறை நாட்களில் எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.