ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?…
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிளுக்கு கூட்டியுள்ளது. இதற்குக் காரணம் ‘ப்ளூம்பெர்க்’ பத்திரிகை வெளியிட்ட ஒரு ரகசிய ரிப்போர்ட் தான் என்று தற்போது உண்மை வெளியாகியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், OPEN AI -ஐ தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனமும் தனக்கான பிரத்தியேக மொழி மாதிரி செயற்கை நுண்ணறிவை உருவாக்க இருக்கும் என தகவல் கசிந்துள்ளது. இதன் பெயர் அஜாக்ஸ் அல்லது ஆப்பிள் ஜிபிடியாக இருக்கலாம். மேலும், ஆப்பிளின் பிரத்தியேக AI உருவாக்கத்திற்காக பல மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களில் மக்கள் ஆப்பிள் பங்குகளை சராமாரியாக வாங்கிக் குவிக்க, பிறகுதான் மேற்சொன்ன களேபரம் நிகழ்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதை பயன்படுத்துவதுடன், முதலீடு செய்யவும் இருப்பதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கூகுள், சாம்சங் என பல நிறுவனங்கள் உற்றுநோக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.