இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

0
142
Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!
Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இந்த மாவட்டத்தில் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இது அமல்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

அனைத்து மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.பல தொழிலாளர்கள்  தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ள இடங்களில் வசிப்பதில்லை.அதனால் அவர்களால் அரசு தரும் எந்த உதவியையும் பெற முடியவில்லை.அதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு இந்த வித திட்டத்தை கொண்டுவந்தது.எந்த மாநிலத்தில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அரசாங்கம் தரும் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.இத்திட்டம் தற்பொழுது நடைமுறைக்கு வர அனைத்து மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்கள் அதிகளவு பாதித்தது.அரசாங்கம் மக்கள் வெளியே செல்லாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.மேலும் மக்கள் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர்.குறிப்பாக தமிழகத்தில் மக்களுக்கு இரு தவணையாக ரூ.2000  வழங்கினர்.தற்பொழுது திமுக ஆட்சி நடைபெறுவதால் பெண் குடும்ப அட்டை உள்ள தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வரும் 4 ஆம் தேதி வர உள்ளது.அதனால் தமிழக ரேஷன் கடைகளில் மாவட்டத்திற்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில்  உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூடுதல் நேரங்களில் இயங்கும் என கூறியுள்ளனர்.அதனால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும்.

மேலும் இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.அதனால் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் என கூறியுள்ளனர்.அதனையடுத்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு இரு தினங்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறை என கூறியுள்ளனர்.மேலும் இந்த தேதிகளில் பொருட்களை வாங்க தவறியவர்கள் தீபாவளி பண்டிகை முடிந்து 7 ஆம் தேதி ரேஷன் கடை இயங்கும்.அப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி ரேஷன் கடைக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என கூறியுள்ளனர்.

Previous articleஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்!
Next articleBREAKING: ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!