அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்!
திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றால் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். இதுபோல் பல புகார்கள் தற்போது வரை வந்து கொண்டுதான் உள்ளது.
மட்டுமின்றி பெண்கள் பேருந்து நிலையம் போது பலருக்கும் பாலியல் சீண்டல் நடக்கிறது. காலம் காலமாக இது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. ஆனால் இதற்கான சரியான தீர்வு தற்போது வரை காணப்படவில்லை. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு இதற்கான தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. அதற்கேற்ப 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது 2500 மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல பேருந்துகளில் கூட்டம் அலை மோதும் போது பயணிகளால் சொல்லமுடியாமல் ஏதேனும் எச்சரிக்கை தெரிவிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான எச்சரிக்கை பட்டணம் தற்போது பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று சென்னை மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்ட பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இனி பேருந்துகளில் திருடுபவர்கள் மற்றும் பாலியல் சீண்டல் செய்பவர்களை எளிதாக கண்டறிய முடியும்.