தமிழ் திரையுலகில் பல மனதை உருக்கும் பாடல்களை இசையமைத்துள்ளார் ‘ஜிவி பிரகாஷ்’. முதலில் “ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்” போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் தனது தனிப்பட்ட திறமையை வெளியிட்டார். அதில் வெயிலோடு விளையாடி என்ற பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் பாடல் இசையமைத்துள்ளார். இவர் பாடலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளங்களும் உண்டு.ஆயிரத்தில் ஒருவன், அசுரன், மயக்கம் என்ன போன்ற படங்களில் இவரது பாடல்கள் பெரும் ஹிட் ஆனது. நிறைய பாடல்களை ஹிட் கொடுத்த நிலையில் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவர் நடித்த சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. எனினும், ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’, சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற படங்களில் தன் திறமையை நன்றாக வெளி காட்டி இருப்பார். அதைத் தொடர்ந்து ‘பேச்சிலர்’ படத்திலும் நன்கு நடித்து இருப்பார். எனினும், ரசிகர்கள் இவர் பாடல்களை இசையமைக்க வேண்டும் என விரும்பினர்.
“சூரரை போற்று” படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதன் பின் வரிசையாக அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் போன்ற படங்களிலும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது முன்னாள் மனைவியான சைந்தவியுடன் ‘பிறைத்தேடும் இரவிலே’ பாடலை மனமுருக பாடி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் குறித்து ஜிவி அளித்த பேட்டி ஒன்று ட்ரண்ட் ஆகி உள்ளது. முதன் முதலில் ‘பொல்லாதவன்’ படத்தில் தான் பாடினேன். ஆடியோ லாஞ்சில் தான் அவரை நேராக முதலில் சந்தித்தேன். நாங்கள் இருவரும் “க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்”. அதைத் தொடர்ந்து ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’ போன்ற படங்களிலும் எங்களின் காம்போ ஹிட்டானது. “வாடா மச்சான், போடா மச்சான்” என்று தான் பேசிக் கொள்வோம். அவரைப் பொறுத்தவரை பிடிக்கவில்லை என்றால் “மூஞ்சியில் அடித்த மாதிரி பேசி விடுவார்” என்றார். தற்போது தனுசு இயக்கி,நடிக்கும் “இட்லி கடை” படத்திலும் தான் இசை அமைப்பதாக சொன்னார் .