நான் இப்படித்தான் இறக்க போகிறேன்!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷாருக்!!

0
148
This is how I'm going to die!! Shahrukh shocked the fans!!
This is how I'm going to die!! Shahrukh shocked the fans!!

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் என்றால் இந்தியாவில் தெரியாத நபர்கள் இல்லை. அந்த அளவிற்கு பிரபலமான உச்சபட்ச நட்சத்திர நடிகர் ஷாருக்கான்.  இவர் கடைசியாக தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை செய்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்தது .

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் அட்லி இயக்கத்தில் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு இவருக்கு சம்பளம் ரூ.250 கோடி. இவ்வளவு சம்பளம் வாங்குவது சாதாரண விஷயம் இல்லை தனது நீண்ட வருட உழைப்பாலும் கஷ்டத்தாலும் இவ்வளவு சம்பளம் பெரும் நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் சுவிச்சர்லாந்தில் நடைபெற்ற 77 வது லோக்கார்னோ விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இந்த விருதினை பெற்ற பின்பு மேடையில் பேசிய அவர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .அதாவது என்னுடைய இறப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் நான் நடித்து கொண்டிருக்கும் போது என்னுடைய உயிர் என் உடலை விட்டு பிரிய வேண்டும். ஆக்ஷன் சொன்ன உடன் என் உயிர் பிரிய வேண்டும் கட் சொல்லும்போது நான் இறந்திருக்க வேண்டும். இவ்வாறு தனது இறப்பு இருக்க வேண்டும் என்று பேசி அரங்கை உறைய செய்தார். சினிமா மீது உண்மையான ஈர்ப்பு கொண்ட ஒரு மனிதன் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.

Previous articleஎங்க அம்மா அந்த மாறி ஆட்களை நம்பி ஏமாந்துட்டாங்க!! VJ அர்ச்சனா குறித்து உண்மையை போட்டுடைத்த மகள்!!
Next articleதமிழக வெற்றிக் கழகத்தில் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள்!!  வெளியான தகவல்!!