திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

Photo of author

By Hasini

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி இருந்த நிலையில், மத்திய அரசோ அதற்கு செவி சாய்கவே இல்லை. அதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சாமானிய மக்கள் ஏனடா வண்டியை வாங்கினோம் என யோசிக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

அதைத்தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதிலும் அதிமுக சார்பில், கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. அதில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவ்வாறு கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு. மேலும்  முந்தைய அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகள் மட்டுமே அளித்துள்ளது. திமுக தேர்தலில் பொய்யான  வாக்குறுதிகளை அளித்து மட்டுமே ஆட்சியை பிடித்துள்ளது. திமுகவின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வாக்குறுதி என்னவானது.

மேலும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்றும் கூறினார்.