நிபா வைரஸ் பரவியது இப்படிதான்! சிறுவன் சாப்பிட்ட பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு!
கேரளாவில் தற்போது நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவன் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவனது சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு 150 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேருக்கும் அந்த அறிகுறிகள் இருப்பதனால் அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
அந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து சிறுவனின் குடும்பத்தார் அனைவருக்கும் தனிமை என அரசு கண்டிப்புடன் சொல்லி உள்ளது. இதனிடையே வவ்வால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே நிபா வைரஸ் பரவி வந்த நிலையில், சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால் அவற்றிற்கும் இது குறித்து பரிசோதனைகள் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆடுகளை மேய்க்க சிறுவன் காட்டு பகுதிகளுக்கு சென்று இருப்பதாலும், அங்கு வௌவால்கள் இருப்பதன் காரணமாக அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி சிறுவனின் வீட்டை ஆய்வு செய்த மத்திய குழு அங்கிருந்த ரம்பூட்டான் மரத்தை பார்த்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை சிறுவன் சாப்பிட்ட தகவல் அறிந்ததும், அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக சிறுவன் உயிரிழந்ததால், மத்திய மருத்துவ நிபுணர் குழு திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளது. வைரஸ் பரவுவது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 74 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல் 12 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் உள்ளது. இந்நிலையில், ஜிகா மற்றும் நிபா வைரஸின் பாதிப்புகளால் மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.