லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

Photo of author

By Rupa

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை வண்டியில் அமரவைத்து மருத்துவமனை ஊழியர் அழைத்து சென்றுள்ளார்,.

அவ்வாறு அழைத்து செல்லும் போது அரசு ஊழியர், பெண்மணியின் அப்பா விடம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது,பணம் கொடுக்க மாட்டீங்களா என கேட்டுள்ளார்.அதற்கு அவர்,பணம் தான் ஏற்கனவே கொடுத்தாச்சே என கூறியுள்ளார்.அதற்கு அந்த அரசு ஊழியர் பெண்மணி,அது மேல் அதிகாரிகளுக்கு எங்களுக்கு வரவில்லை என கூறியுள்ளார்.மேலும் வண்டியை கவனத்துடன் தள்ளாமல்,வேண்டா வெறுப்பாக தள்ளியுள்ளார்.அவ்வாறு தள்ளியதில் பிரசிவித்த பெண் கீழே விழும் நிலைக்கு சென்றுவிட்டார்.

அம்மருத்துவமனையில் படுக்கை வசதி கூட இல்லாமல்,மிக கொடூரமான முறையில் அந்த பிரசவமடைந்த பெண் இருந்துள்ளார்.இந்நிலையில் அரசு ஊழிய பெண்மணி லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்ததால்,இறக்கம்மில்லாமல் பச்சிளம் தாயை கீழே தள்ளியது பலரையும் கோவமடைய செய்தது.அந்த பெண்ணின் உறவினர்களும்,சுற்றி இருந்த பொது மக்களும் அந்த அரசு ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பிரசவமடைந்த அந்த பெண்மணி அந்த ஊழியரிடம்,எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் போதாதா?அரசு மருத்துவமனைக்கு எதற்கு வருகிறோம் என கேட்டது அனைவரின் மனதையும் காயமடைய செய்தது.அந்த பெண்மணி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.அரசு ஊழிய பெண்மணி உமாவிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.