கோவாவில் தற்போது 55 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய மனசோர்வை போக்க இதுதான் காரணமாக அமைந்தது என ஒரு விஷயத்தினை சுட்டி காட்டியுள்ளார்.
இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது :-
தன்னுடைய தந்தையின் அகால மரணம் வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியதாகவும் மனச்சோர்வில் தன் வேலைகளை செய்யத் துவங்கியபோது பார்வையாளர்களின் விசில்களும் அவர்களின் கைத்தட்டலும்தான் தனக்கு மிகச்சிறந்த சிகிச்சையாக மாறியதாகவும் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து ஏராளமான ரசிகர்களின் வரவேற்புடன் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில் வெள்ளி திரையிலும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
மேலும் சிவகார்த்திகேயனை குறித்து நடிகர் பரத் அவர்கள் பேசியிருப்பதாவது :-
அனைவரும் சிவகார்த்திகேயனை போல சக்சஸாக மாற நினைப்பதாகவும் ஆனால் அந்த இடத்திற்கு வருவதற்கு அவர் பட்ட சிரமங்கள் மிகவும் அதிகமானது என்றும் நடிகர் பரத்தும் சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியிருந்தார். அவரை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 20 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த காதல் மட்டும் இன்றி வேறு எந்த புதுவித கதை கொடுத்தாலும் சாதித்து காட்டுவேன் என நிரூபித்துள்ளார்.