அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.!

0
257
I am coming to politics for the people….. Actor Vishal has confirmed his entry into politics…!!!
I am coming to politics for the people….. Actor Vishal has confirmed his entry into politics…!!!

அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.!

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்த விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஷால் இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ரத்னம் படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனால் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக எந்த பக்கம் பார்த்தாலும் ரத்னம் படக்குழுவினர் தான் உள்ளனர். அந்த அளவிற்கு வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எப்போ கல்யாணம் பண்ணப்போறனு என் பெற்றோர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். முதலில் ஆர்யா திருமணம் முடிந்ததும் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். இப்போது ஆர்யா திருமணம் செய்து குழந்தையே பிறந்து விட்டது. பின் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினேன்.

திருமணம் என்பது சாதாரண விஷயமல்ல. நான் திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால் அதன் மீது எனக்கு வெறுப்பு என்று அர்த்தமல்ல. நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கானவள் நிச்சயம் காத்திருப்பாள்” என்று கூறியுள்ளார்.

Previous articleகுழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!
Next articleஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!