இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்லது கர்நாடகா அல்ல என்றும், இது மகாராஷ்டிரா என்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசினார்.
இன்று இரவு சரியாக 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் 162 எம்.எல்.ஏக்களை அணிவகுத்து காட்டிய சரத்பவார், எங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கே 162 எம்.எல்.ஏக்கள் என்றால், அங்கே 126 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய சரத்பவார், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இன்னும் அதிகமான எம்எல்ஏக்களை அழைத்து வருவோம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பட்நாவிஸ் தலைமையிலான அரசை உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அவரது ஆட்சி கவிழும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை அமித்ஷா ஐடியா அனைத்து மாநிலங்களிலும் வெற்றியைத்தான் கொடுத்துள்ளது. அந்த மாயாஜாலம் மகாராஷ்டிராவிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்