ADMK: தமிழகத்தில் மீண்டும் 2026 யில் கொடி நாட்ட வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சியை வலுப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அதிமுகவுடன் மீண்டும் கை கோர்த்தது. மேற்கொண்டு அதிமுகவும் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரம் கட்டி வருகின்றனர். குறிப்பாக பூத் கமிட்டி குறித்து ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்ட நிலையில் தற்போது வரை அது ரீதியான வேலைகள் மந்தமாக இருப்பதால் நிர்வாகிகள் மீது எடப்பாடி கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி விருந்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் முதலாவதாக பூத் கமிட்டி வேலைகள் குறித்து தான் பேசப்பட்டது. 234 தொகுதிகளுக்கு 68,144 பூத்களும் ஒவ்வொரு பூத்களிலும் தலா மூன்று மகளிர் உட்பட ஒன்பது நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாவட்ட செயலாளர்கள் இதன் வேலையை சரிவர கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற எடப்பாடி, ஒரு கட்சிக்கு பூத் கமிட்டி தான் மிகப்பெரிய வெற்றியை வாங்கி தரும்.
அந்த வகையில் ஒவ்வொரு பூத் கிளையும் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே 2026 ஆட்சியை வெல்ல முடியும்?? இதனால் யாரையும் ஏமாற்றாதீர்கள், செயல்பாடுகளை தீவிரமாக்குங்கள். வரப்போகும் தேர்தல் நமக்கு சாதகமாக இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய காலகட்ட சூழலில் மக்கள் திமுக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் கூட்டணி அமைக்க ஏதுவாக உள்ளது. அதனையெல்லாம் ஒன்று சேர்த்து கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த முறை தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியானது கை மீறி போனது, இம்முறை அதனையெல்லாம் சரிகட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.
அதனால் மே மாதம் 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி வேலைகளை முடித்தாக வேண்டுமென பழனிசாமி கூறியுள்ளார். மேற்கொண்டு இதன் இறுதி கட்ட தரவுகளை மேலிடத்திற்கு கொடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.