காந்தியடிகளின் 75 வது நினைவு தினம்! அஞ்சலி செலுத்த வந்த ஆளுநருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
113

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார்.

இதற்காக மெரினா கடற்கரைக்கு வந்த அவர் காரில் இருந்து இறங்கி சென்ற சமயத்தில் வாழ்க, வாழ்க, திராவிடம் வாழ்க, திராவிட நாடு வாழ்க, என்ற பாடல் பாடப்பட்டது. இந்த பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பாடியதாக சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்த போது மகாத்மா காந்தி வாழ்க, பாரத நாடு வாழ்க, என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. ஆளுநர் வருகை தரும் சமயத்தில் திராவிடநாடு பாடல் வெளியானது தற்சமயம் பேசுபொருளாகியிருக்கிறது.

பாஜகவை பொருத்தவரையில் திராவிட கட்சிகளை முற்றிலுமாக வேறருக்க வேண்டும் என்பதே தமிழகத்தில் அந்த கட்சியின் மன எண்ணமாக இருக்கிறது. ஆனால் தற்போது மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஆளுநர் வருகையின்போது இந்த திராவிட நாடு பாடல் ஒளிபரப்பப்பட்டது பாஜகவை மேலும் கோபமுற செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நடுநடுங்கிய ஆளும் தரப்பு!
Next articleநாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!