ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் பெருமபாலானோர் தங்கள் பள்ளி பருவ வயதில் அதாவது டீன் ஏஜ் காலத்தில் உடலில் பல மாற்றங்களை சந்திக்கின்றனர்.இந்த உடல் மாற்றங்களில் ஒன்று தான் ஹார்மோன் பிரச்சனை.
ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் உருவாகிறது.இது பருவ கால அழகையே அலங்கோலப்படுத்திவிடும்.இந்த டீன் ஏஜ் பருக்களை போக்க ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள்.சிலருக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கிறது.சிலருக்கு என்ன செய்தும் பருக்களை போக்க முடிவதில்லை.
முகப்பருக்கள் வரக் காரணங்கள்:
1)உடலில் ஹார்மோன் அதிகரிப்பு
2)சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரித்தல்
3)மாசுபாடு
4)இரசாயன பயன்பாடு
பருக்களில் உள்ள தண்ணீர் பட்டால் மற்ற இடங்களிலும் அவை பரவிவிடும் என்பதால் முகத்தில் உள்ள பருக்களை தொடவோ அல்லது கிள்ளவோ கூடாது.பருக்களை மறைய வைக்க நாம் இயற்கை வழிகளை பின்பற்றலாம்.
**தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
**ஹெர்பல் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்தினால் பருக்கள் வருவது குறையும்.
**நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்களை உட்கொண்டால் பருக்கள் மறையும்.பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து குழைத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறையும்.
**கற்றாழை ஜெல்,வெந்தய பேஸ்ட் போன்றவை முகப்பருக்களை மறைய வைக்கும்.மஞ்சள் தூள் பயன்படுத்தி முகத்தை கழுவினால் பருக்கள் வருவது கண்ட்ரோல் ஆகும்.
**தலையில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் முகப்பரு வர வாய்ப்பிருக்கிறது.எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளித்தால் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கும்.
**தலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பருக்கள் வரக் கூடும்.எனவே இயற்கையான முறையில் பொடுகை போக்க முயற்சி செய்யுங்கள்.
**வேப்பிலை,குப்பைமேனி,கற்றாழை போன்றவற்றை அரைத்து முகத்திற்கு பூசி வாஷ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்கு,எண்ணெய் போன்றவை நீங்கும்.மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நன்றாக உறங்க வேண்டும்.தூக்கமின்மை பிரச்சனையால் மனசோர்வு மற்றும் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
**முகத்தில் அதிகளவு பருக்கள் இருப்பவர்கள் எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.ஆரஞ்சு,மாதுளை,ஆப்பிள் போன்ற பழங்களின் சாறை தினமும் பருகி வந்தால் முகப்பரு பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம்.