எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

Photo of author

By Pavithra

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

Pavithra

எனது மரணத்திற்கு காரணம் இதுதான்:! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி இளைஞர்!!

எனது மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ரம்மி தான் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய வேண்டும் என்று அவசர சட்டத்திற்கு திமுக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மலையாண்டி பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞன் அங்குள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு பயின்று வருகிறார்.ஆன்லைன் ரம்மி விளையாட்டிருக்கு அடிமையான இவர் பணம் கட்டி ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.
இதனால் அதிக பணத்தையும் இழந்துள்ளார்.விட்டதை பிடிக்க போவதாக கூறி தனது நண்பர்களிடம் கடனுக்கு வாங்கி மீண்டும் விளையாண்டுள்ளார்.
இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க,விரக்தியடைந்த சந்தோஷ் நேற்று முன்தினம் அக்டோபர் 5 அன்று,எனது மரணத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ஆன்லைன் ரம்மி தான் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தோஷையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு,மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.