வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

Photo of author

By Parthipan K

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

Parthipan K

This is the collection of Varisu! Twitter post published by the film crew!

வாரிசு படத்தின் வசூல் இதுதான்! படக்குழுவினர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகரில் ஒருவர் விஜய்.இவர் திரையுலகிற்கு எண்ணற்ற ஹிட் படங்ககளையும் கொடுத்துள்ளார்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்,தில்ராஜி தயாரிப்பில் ,விஜய் நடிப்பில் தாயராகி கடந்த ஜனவரி 11 ஆம் தேதியில் திரையுலகில் வந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்த படம் அப்பா மகன் இடையே நிகழும் பிரச்சனை தான்.குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தாயார் செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது பேமிலி சென்டி மென்ட் படமாக உள்ளது என கூறியுள்ளனர்.

இந்த படத்தினை காண பல பிரபலங்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து செல்கின்றனர்.அதனைத் தொடர்ந்து துணிவு படமும் அதே தேதியில் வெளியானது.முதல் நாளிலேயே வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு படம் முதலிடம் பிடித்தது.அதனையடுத்து வாரிசு படத்திற்கு வசூல் அதிகரித்து வருகின்றது இந்த படம் குடும்ப பார்வையாளரின் ஆதரவை பெற்றுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு நாட்கள் நிலையில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் படத்தின்  தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.