கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தனியார் கல்லூரிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்
தற்போது இருக்கும் சூழலில் அனைத்து மக்களும் கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கல்லூரிகள் மாணவர்களை கல்லூரி கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தக் கூடாது, மேலும் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், என்று தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் மக்கள் மிகவும் நலிவடைந்து போயிருக்கிறார்கள். பொருளாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் கல்லூரிகள் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தக் கூடாது என்றும் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் பொன்முடி கூறியுள்ளார்.
கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த கல்லூரி மீது மிகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை சொல்லியுள்ளது.