ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி!

Photo of author

By Hasini

ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மனிதர்களுக்கு தான் குழந்தை பிறப்பு கடினம் என்று நினைத்தால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கும் அது கடினம் தான் போல. ஒரு ஜோடி பாண்டா கரடிகள் ஏழு முறை முயற்சித்து தற்போது முதல் முறையாக குட்டி போட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. அதிலும் சுதந்திர தினத்தன்று என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காய்காய் மற்றும் ஜியாஜியா என்ற பாண்டா கரடிகளுக்கு 200 கிராம் எடையில் ஒரு குட்டி பிறந்துள்ளதாகவும், தற்போது நடைபெற்றுவரும் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு நடுவில், இந்த குட்டி பிறந்துள்ளது முத்தாய்ப்பான விசயமாக இருக்கிறது இந்த குட்டி பிறந்தது என ரிவர் சபாரியின் வன விலங்குகள் காப்பகத்தில் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது.

ஆனாலும் பிறந்தது ஆணா? அல்லது பெண்ணா? எனபது தெரியவில்லை என்றும், பிறந்த குட்டியும், தாய் பாண்டாவும் தனி சிறையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன. அவற்றுக்குள் ஒரு பிணைப்பு ஏற்படவும், குட்டியை அன்னை பராமரிக்கவும் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

ஜியாஜியா மற்றும் காய்காய் இரண்டும் கடந்த 2015 ம் ஆண்டு முதல் இனப்பெருக்கம் செய்ய முயன்று வந்தன. ஆனால் ஏழாவது முறையாக அது வெற்றி அடைந்து இருக்கிறது. கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பாண்டா என்ற ராட்சத கரடிகளுக்கு கடினம் தானே எனவும் கூறினார்கள்.

13 வயதான ஆண் பாண்டாவும், 12 வயதான பெண் பாண்டா கரடியும் இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், இனபெருக்கம் செய்ய தேவையான அறிகுறிகள் காணப்பட்டதன் காராணமாக இந்த ஏற்பாடு நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு சீன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் அறிவுறுத்தலின் படி, இந்த காப்பகத்தின் விலங்கு மருத்துவர்கள் செயற்கை கருத்தரிப்புக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. மேலும் பாண்டா கரடிகள் மூன்று முதல் ஐந்து மாதங்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த செய்தியை கேட்ட பிரதமர் மர் லீ சியன் லூங்கும் குதூகலித்துள்ளார். மேலும் அவர் இந்த பராமரிக்கும் ஊழியர்களுக்கு பாராட்டுகள் எனவும் கூறியுள்ளார்.