இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

0
144
This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!
This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே அவற்றையெல்லாம் பார்வையிடுவதற்காக கடந்த 4 நாட்களாக முதல்வர் சென்னை பகுதிகளில் நகர்வலம் வருவது நாம் அறிந்த விஷயம்தான். மழையினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளான வடசென்னையில், புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்புர், கொளத்தூர், வில்லிவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் அவர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச உணவினை ருசி பார்த்து அவர்களுக்கு வழங்கவும் செய்தார். இந்த ஆய்வு பணிகள் மற்றும் மாம்பழ கால்வாய் பகுதிகளில் கழிவுகளை அகற்றும் பணிகள் குறித்தும் அனைவரிடமும் கேட்டறிந்தார். இன்று அவர் தி.நகரில் விஜயரகவா சாலையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றார்.

ஆனால் முதல்வரான அவர் செய்யும் இந்த ஆய்வு பணிகள் குறித்து மிக பலர் பாராட்டவும், மிகப் பலர் விமர்சிக்கவும் ஆரம்பி௯து உள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் சகட்டுமேனிக்கு அவரை விமர்சித்தும் வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் உள்ளார்.

இவர் தனது டுவிட்டர் புகைப்படத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததோடு முதல்வரை அதன் மூலம் விமர்சிக்கவும் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ள படி முதலமைச்சர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பகுதிகளிலெல்லாம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. அதனால் வீட்டில் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து முதலமைச்சருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

இவரும் மக்களுக்கு எதிர் வணக்கம் செலுத்தி மழை நீரில் நடந்து செல்கிறார். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டதோடு அவர், இது செயல்படும் அரசா? இல்லை செய்திக்கான அரசா? நீங்களே சொல்லுங்கள் முதல்வரே? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். அத்துடன் வீட்டின் முன்பு கட்டப்பட்ட அந்தக் கயிறுகளை சிகப்பு நிற குறியீட்டில் சுட்டிக் காட்டவும் அவர் மறக்கவில்லை.

இந்த புகைப்படத்திற்கு பலர் அவர்களது சொந்த கருத்துக்களை பதிவு செய்து பதில் தெரிவித்து வருகின்றனர். அதில் சில அவருக்கு ஆதரவாகவும், சிலர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பாதிப்பில்லாத இடத்தில படகில் சென்று  வீடியோ பதிவிடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleநாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
Next articleஅந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!