அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

0
143

எதிர்க் கட்சியான திமுக இப்பொழுது மிகப்பெரிய பசியில் இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த அனைவரும் கொள்ளையடிப்பதற்கு தற்போது தயாராக இருக்கிறார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவிற்கு எதிர்வரும் தேர்தலில் தான் கடைசி தேர்தல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் சசிகலா 198 கோடி ரூபாய் செலவு செய்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்கள் செல்வாக்கு எதுவும் அற்ற ஒரு மனிதர் போலியான தோற்றத்தை உருவாக்குவதற்கு ஒரு நாடகத்தை நடத்தி இருக்கின்றார் என்று தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.

பெங்களூருவில் இருந்து சென்னையில் வந்து சேரும் வரையில் சசிகலாவின் கார் ஒரே பூ மழையில் மிதந்து வந்து இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் பூத்திருந்த பூக்களை எல்லாம் மொத்தமாக வாங்கிய ஆங்காங்கே தூவி இருக்கிறார்கள். சசிகலாவும் அவருடைய உறவினர்களும் கடலில் கரைந்து போன பெருங்காயம் போல காணாமல் போய்விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை எல்லோருடைய கருத்தும் எதிர்வரும் தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான்.

அதிமுகவில் சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரையும் சேர்க்கப்போவதில்லை என்பதுதான் கட்சியின் உண்மையான நிலைப்பாடு. இதுவே ஒருங்கிணைப்பாளர் கருத்தும் கூட அதிமுக உப்பை தின்றுவிட்டு கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள் என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

Previous articleமக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!
Next articleவிவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!