மாஸ்டர் பட வசூலையே முறியடித்த படம் இது தான்! அதிர்ச்சியில் விஜய் பட ரசிகர்கள்!

0
80
This is the movie that broke the master movie collection! Vijay movie fans in shock!
This is the movie that broke the master movie collection! Vijay movie fans in shock!

மாஸ்டர் பட வசூலையே முறியடித்த படம் இது தான்! அதிர்ச்சியில் விஜய் பட ரசிகர்கள்!

தளபதி படத்திற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றால் 7 மாதங்களுக்கு மேல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அந்தவகையில் தல மற்றும் தளபதி என ஆரம்பித்து எந்த பெரிய நடிகர்களின் படமும் திரையரங்குகளில் வெளியிடாமல் இருந்தது.அனைவரும் ஆவலாக எப்போது திரையரங்குகள் திறப்பார்கள் என காத்திருந்தனர்.

ஊரடங்கு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் திறக்க அனுமதி கொடுத்தனர்.அப்போது மக்கள் அனைவரும் எதிர் பார்த்த அந்த நாள் வந்தது.சென்ற வருட தீபாவளிக்கு ரீலிஸ் செய்ய வேண்டிய விஜயின் மாஸ்டர் படம் கொரோனாவால் தாமதம் ஆகி தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.அதன்பின் மக்கள் அனைவரும் முந்திக்கொண்டு தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர்.

தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டாலும் படத்தின் வசூல் வேட்டை சிறிதளவும் குறையவில்லை.துபாயில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆன 5 நாட்களிலே பல மில்லியன் கணக்கில் வசூலைத் தந்தது.ஆனால் தற்போது ரிலீஸ் செய்யப்பட்ட காட்சில்லா வெஸ் காங் படம் துபாயில் வெளியாகி 3 நாட்களிலேயே நம் இந்தியா ரூபாயின் மதிப்பில் 800 கோடியை வசூலைக் கொடுத்துள்ளது..மாஸ்டர் படத்தின் சாதனையை காட்சில்லா வெஸ் காங் படம் முறியடித்துள்ளது.இப்படம் பலரை கவர்ந்துள்ளது.இப்படி ஓப்பனிங் கலக்க்ஷனே 180 மில்லியன்களை தாண்டியுள்ளது.இன்னும் பல மில்லியன்களை தாண்டும் என படத்தை பார்த்த அனைவரும் பேசி வருகின்றனர்.இந்தியாவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.