பிக் பாஸ் சீசன் 5 ல இவருதான் வரப்போறாரு!! இவருக்கு அவளோ மவுசா!!

Photo of author

By CineDesk

பிக் பாஸ் சீசன் 5 ல இவருதான் வரப்போறாரு!! இவருக்கு அவளோ மவுசா!!

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் உள்ள சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கண்டுகளிக்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் விஜய் டிவிகென ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது ரியாலிட்டி ஷோக்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது தான். அந்த வகையில் பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, போன்ற பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் புகழ் பெற்றது.

இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி உலக அளவில் பெரும் வரவேற்பறை பெற்றுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். ஒரே வீட்டில் 15 பேர், 100 கேமரா, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, என்ற கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மக்கள் நாயகன் கமலஹாசன். மேலும் 100 நாட்களில் வாரம் தோறும் ஒருவர் அந்த வீட்டில் இருக்க தகுதி இல்லை என்று வெளியே நீக்கப்படுவர். கடைசியிலும் இருக்கும் அந்த ஒருவருக்கு மட்டுமே பிக்பாஸ் டைட்டில் வழங்கப்படும்.

மேலும் கடந்த 4 சீசனில் முடிந்ததில், முதல் சீசனில் நடிகர் ஆரவ், இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் பாடகர் முகேன் ராவ், நான்காவது சீசனல் நடிகர் ஆரி அர்ஜுன் என நால்வரும் பிக் பாஸ் டைட்டிலை வென்றார்கள். இதை தொடர்ந்து கடந்த வருடம் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 முடிந்ததிலிருந்து பிக் பாஸ் சீசன் ஐந்து எப்பொழுது வரும் இந்த நிகழ்ச்சியை யாரெல்லாம் பங்கு கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து வந்தது. ஆனால் இந்த பிக் பாஸ் சீசன் 5 பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது அந்த ஐந்தாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பிரபல சீரியல் நடிகர் கலந்து கொள்ள உள்ளார் என்ற உறுதியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் தான். இவர் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல் நடிகராக உள்ளார். இதைத்தொடர்ந்து மற்ற 14 பேர் யார் என்று தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.