ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்!

Photo of author

By Pavithra

ஆன்லைன் வகுப்புகளால் பயனடையும் மாணவர்கள் இத்தனை சதவீதம்தான்:! திடுக்கிடும் ஆராய்ச்சி அறிக்கை தகவல்

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் பள்ளி கல்லூரிகளின் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.ஆனால் நிகழ்வு ஆண்டில்,கல்வி கற்கும் மாணவர்கள் பெரும்அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க ஆன்லைன் முறையை மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தினர்.ஆனால் இந்த முறையினால் பலதரப்பட்ட நடுத்தர குடும்ப மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து ஆராய்ச்சி ஒன்றினை செய்தது.இந்த தேசிய கல்வி ஆராய்ச்சி குழு சுமார் 34,000 மாணவர்களிடையே ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில்,27 சதவீத மாணவர்கள் இந்த ஆன்லைன் மூலமாக படிக்க இயலாத சூழ்நிலைகளில் இருப்பதாகவும் அவர்களிடம் தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவை இல்லை என்றும் அந்த ஆய்வு குழு கூறியது.

இதேபோன்று 28 சதவீத மாணவர்களுக்கு போதிய மின்சார வசதி இல்லை என்றும்,அடிக்கடி ஏற்படும் மின்சார துண்டிப்பால் மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும்,மேலும் 50 சதவீதம் மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் தரவில்லை என்றும், இது போன்ற கரணங்களால் ஆன்லைன் வகுப்பில் சிரமம் உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.இதில் சுமார் 17 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்பால் பயன் அடைவதாக அந்த ஆய்வு தகவல் கூறியிருக்கின்றது.